ஐ.டி.எப். டென்னிஸ்: அங்கிதா போராடி தோல்வி


ஐ.டி.எப். டென்னிஸ்: அங்கிதா போராடி தோல்வி
x

கோப்புப்படம் 

புருவிர்தோவா 0-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அங்கிதாவை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார்.

பெங்களூரு,

ஐ.டி.எப். பெண்கள் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 241-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 163-வது இடத்தில் உள்ள பிரன்டா புருவிர்தோவாவுடன் (செக்குடியரசு) மோதினார்.

இதில் முதல் செட்டில் எதிராளியின் தவறுகளை சரியாக பயன்படுத்தி ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் கைப்பற்றிய அங்கிதா 2-வது செட்டிலும் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி கண்ட புருவிர்தோவா அந்த செட்டை தனதாக்கியதுடன், கடைசி செட்டையும் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

முடிவில் புருவிர்தோவா 0-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அங்கிதாவை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார். 15 வயதான பிரன்டா புருவிர்தோவா, சென்னை ஓபனில் மகுடம் சூடிய லிண்டா புருவிர்தோவாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது


Next Story