'நான் டென்னிஸ் களத்திற்கு மீண்டும் திரும்புவேன்'- முன்னாள் நம்பர் 1 வீராங்கனை


நான் டென்னிஸ் களத்திற்கு மீண்டும் திரும்புவேன்- முன்னாள் நம்பர் 1 வீராங்கனை
x

image courtesy; AFP

அமெரிக்காவை சேர்ந்த 43 வயதான அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

கலிபோர்னியா,

முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான வீனஸ் வில்லியம்ஸ் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 43 வயதான அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். அதன்பின் காயம் காரணமாக எந்த வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் வேல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்பதை இலக்காக கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ' நான் டென்னிஸ் களத்திற்கு மீண்டும் திரும்புவேன். எனது காயங்கள் குறித்து விளக்க விரும்பவில்லை. ஏனெனில் தோல்விக்கு அதை காரணமாக கூறுவதை நான் வெறுக்கிறேன். இப்போதைக்கு என்னுடைய பெரிய இலக்கு இந்தியன் வேல்ஸ் மற்றும் மியாமி ஓபன் தொடர்களில் பங்கேற்பது மட்டுமே. அந்த தொடர்களில் கடந்த 3 வருடங்களாக நான் விளையாடவில்லை. மேலும் டென்னிஸ் களத்தில் சாதிக்க எனக்கு நிறைய இலக்குகள் உள்ளன' என்று கூறினார்.


Next Story