இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy: BNP Paribas Open twitter

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் 28-வது இடத்தில் உள்ள டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்னா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-5 என்ற நேர்செட்டில் கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்-டேனிஸ் ஷபோவாலோவ் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில், அரினா சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி(கிரீஸ்) ஆகியோர் அரைஇறுதியை எட்டினர்.


Next Story