இத்தாலியன் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூனே


இத்தாலியன் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூனே
x

இத்தாலியன் ஓபன் காலிறுதிப் போட்டியில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஹோல்ஜர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.

அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, நார்வே வீரர் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் முதல் செட்டை காஸ்பர் ரூட் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஹோல்ஜர் ரூனே அடுத்த இரு செட்களையும் தொடர்ச்சியாக வென்றார்.

இறுதியில், ரூனே 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். காலிறுதியில் முன்னணி வீரரான ஜோகோவிச்சை தோல்வி அடையச் செய்தவர் ஹோல்ஜர் ரூனே என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story