இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: கால்இறுதி சுற்றில் ஜோகோவிச் தோல்வி


இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: கால்இறுதி சுற்றில் ஜோகோவிச் தோல்வி
x

Image Courtesy : @InteBNLdItalia twitter

கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் தோல்வி அடைந்தார்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஹோல்ஜர் ருனேவை (டென்மார்க்) சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 2-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் ஹோல்ஜர் ருனேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடம் நீடித்தது.


Next Story