மராட்டிய ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்


மராட்டிய ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : @MaharashtraOpen twitter

குரோஷியா வீரர் மரின் சிலிச் ஸ்பெயினின் ராபர்டோ கார்பாலெஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

புனே,

5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட குரோஷியா வீரர் மரின் சிலிச் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பாலெஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் செர்பியா வீரர் பிலிப் கிராஜ்னோவிச் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மிச்செல் மோமோவை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் அஸ்லான் கரட்சேவ் (ரஷியா), போடிக் வான்டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து), பெஞ்சமின் போன்ஜி (பிரான்ஸ்), டாலோன் கிரிக்ஸ்பூர் (நெதர்லாந்து) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதியை உறுதி செய்தனர்.


Next Story