மியாமி ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டிமிட்ரோவ்


மியாமி ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டிமிட்ரோவ்
x

Image Courtesy: AFP

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட டிமிட்ரோவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் டேனியல் மெத்வதேவ் - ஜன்னிக் சின்னெர், கிரிகோர் டிமிட்ரோவ் - அலெஸ்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோத உள்ளனர்.


Next Story