மியாமி ஓபன் டென்னிஸ்; மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி


மியாமி ஓபன் டென்னிஸ்; மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy: AFP

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

மியாமி,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து 3வது செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சபலென்கா 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story