பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

Image Courtesy: AFP
இந்த தொடரில் நோவக் ஜோகோவிச் (ரவுண்டு ஆப் 32 சுற்று) இன்று தனது பயணத்தை தொடங்கினார்.
பாரிஸ்,
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகள் பாரிஸில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று, முதல் சுற்று (ரவுண்டு ஆப் 62) போட்டிகள் தொடங்கியது. நவம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் இந்த தொடரில் செர்பிய நட்சத்திரம் வீரர் நோவக் ஜோகோவிச் (ரவுண்டு ஆப் 32 சுற்று) இன்று தனது பயணத்தை தொடங்கினார். இதில் அமெரிக்காவின் மாக்சிம் க்ரெஸ்ஸியை எதிர்கொண்ட ஜோகோவிச், 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story






