ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசை : நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மெத்வதேவ் முதலிடம்..!!


ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசை : நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மெத்வதேவ் முதலிடம்..!!
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 14 Jun 2022 10:11 AM GMT (Updated: 14 Jun 2022 10:54 AM GMT)

தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்த ஜோகோவிச் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

லண்டன்,

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்-சை பின்னுக்கு தள்ளி ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

7,950 புள்ளிகள் உடன் மெத்வதேவ் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.

நெதர்லாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்த லிபெமா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் டேனில் மெத்வதேவ் 2-வது இடம் பிடித்தார். இறுதி போட்டியில் முன்னணி வீரர் டேனியல் மெத்வதேவ்-க்கு அதிர்ச்சி தோல்வி அளித்து இளம் வீரர் டிம் வேன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story