டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்


டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்
x

போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.



பாரீஸ்,


டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூ.டி.ஏ.) வெளியிட்டு வருகிறது. இதன்படி, சமீபத்தில் வார இறுதி நாளான நேற்று நடந்த சான் டீகோ ஓபன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா நாட்டின் டோன்னா வெகிச் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனால், அவர் மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது, நடப்பு ஆண்டில் அவர் பெறும் 64-வது சாதனை வெற்றியாகும். சான் டீகோ ஓபன் போட்டியில் காலிறுதியில் டேனியல்லே காலின்சிடம் தோற்ற ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 4 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 4-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு சென்றுள்ளார்.

இந்த தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதல் இடத்திலும், ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.

1 More update

Next Story