பிரெஞ்சு ஓபன் : இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் வெற்றி


பிரெஞ்சு ஓபன் : இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் வெற்றி
x

Image Courtesy : PTI 

இந்தியாவின் ராம்குமார், அமெரிக்காவின் ஹண்டர் ரீஸ் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பாரிஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் ஹண்டர் ரீஸுடன் ஜோடி - ஜெர்மனியின் டேனியல் அல்ட்மேயர் மற்றும் ஆஸ்கார் ஓட்டே ஜோடியை எதிர்கொண்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய- அமெரிக்க இணை 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மன் ஜோடியை வீழ்த்தினர். இது பிரெஞ்சு ஓபன் போட்டியில் ராம்குமார் ராமநாதன் பங்கேற்கும் முதல் போட்டியாகும்.

அதுமட்டுமின்றி ராம்குமார் ராமநாதன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தனது முதல் மெயின் டிரா வெற்றியைப் பெற்றுள்ளார்.


Next Story