டேவிஸ் கோப்பை டென்னிசில் இருந்து வெற்றியோடு விடைபெற்றார் ரோகன் போபண்ணா


டேவிஸ் கோப்பை டென்னிசில் இருந்து வெற்றியோடு விடைபெற்றார் ரோகன் போபண்ணா
x

Image Courtesy : @AITA__Tennis 

43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.

லக்னோ,

டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப்2 சுற்றில் இந்தியா-மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.

2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட்-யுனெஸ் லலாமி லாரோசி இணையை ஊதித்தள்ளியது.

பெங்களூருவை சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும். வெற்றியோடு அவர் இந்த போட்டியில் இருந்து விடைபெற்றார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஏராளமானோர் இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தனர்.


Next Story