அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்...!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்...!
x

Image Courtesy: @usopen

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதி ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸை எதிர் கொள்ள உள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இரு வீரர்களும் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஜன்னிக் சின்னரை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதையடுத்து அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நாளை நடைபெறும் ஒரு காலிறுதி ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸை எதிர் கொள்ள உள்ளார்.


Next Story