அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார் டெய்லர் பிரிட்ஸ்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார் டெய்லர் பிரிட்ஸ்
x

Image Courtesy : @usopen twitter

இந்த தொடரில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் 4 பேர் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் டாமினிக் ஸ்டிரைகர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் 7-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த தொடரில் ஏற்கனவே 4-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அமெரிக்க வீரர்கள் பென் ஷெல்டன், பிரான்செஸ் டியாபோ மற்றும் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story