ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 3 Dec 2021 4:15 PM GMT (Updated: 3 Dec 2021 4:15 PM GMT)

போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

புவனேஸ்வர் ,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலக கோப்பை  தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது. 

கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜெண்டினா அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின .

இந்த போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த உலகக்கோப்பை தொடரின் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் நாளை மறுநாள்  முதல் அரையிறுதியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.


Next Story