தென்கொரியா ஒலிம்பிக் சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கம்!


தென்கொரியா ஒலிம்பிக் சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கம்!
x
தினத்தந்தி 22 Dec 2021 6:14 PM IST (Updated: 22 Dec 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

தென்கொரியா ஒலிம்பிக் சாம்பியன் சக விளையாட்டு வீரர்களைத் தவறாக தரக்குறைவாகப் பேசியதால் ஒலிம்பிக் போட்டியில் நீக்கப்பட்டார்.

சியோல்,

தென்கொரியா நாட்டை சேர்ந்தவர் ஷிம் சுக்-ஹீ. இவர் இரண்டு முறை ஒலிம்பிக் ஷார்ட் டிராக் சாம்பியனாக வெற்றி பெற்றவர். இவர் விளையாட்டு வீரர்களைக் குறுஞ்செய்தி மூலம் தரக்குறைவாக்கப் பேசியுள்ளார். இதனால், நேற்று நடைபெற்ற பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து,  வீராங்கனை ஷிம்மை தேசிய அணியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கொரியா ஸ்கேட்டிங் யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வீராங்கனை ஷிம், கொரிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யலாம் அல்லது உள்ளூர் நீதிமன்றத்தில் ஒரு தடை உத்தரவுக்காகத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் ஒலிம்பிக் கமிட்டி அதன் குறுகிய தட நுழைவுப் பட்டியலை ஜனவரி 24 அன்று சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story