சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு...!


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு...!
x
தினத்தந்தி 3 Jan 2022 6:50 AM GMT (Updated: 3 Jan 2022 6:50 AM GMT)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அறிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் முகமது ஹபீஸ். இவர் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 614 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 134 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். 

அதேபோல், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 440 ரன்களும், 61 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 652 ரன்களும், 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது ஹபீஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.    

Next Story