ஐபிஎல் போட்டி ஏலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கெஞ்சல்...!
ஐபிஎல்:'இறுதி ஏலத்திற்கான உங்கள் பிரார்த்தனையில் என்னை வைத்துக் கொள்ளுங்கள்' என்று 38 வயதான இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி,
ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மெகா ஏலத்தில் 590 வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. லக்னோ (சூப்பர் ஜெயண்ட்ஸ்) மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு மெகா ஏலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
இந்நிலையில் 38 வயதான இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மெகா ஏலத்தின் 590 வீரர்களில் ரூ 50 லட்சம் அடிப்படை விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஸ்ரீசாந்த் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்தார், ஆனால் அவரது பெயர் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை.
அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஏழு ஆண்டு தடைக்குப் பிறகு திரும்பிய ஸ்ரீசாந்த், கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அலி கோப்பையில் கேரளாவுக்காக விளையாடினார், அதில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதிப் பட்டியலில் பெயர் இடம் பெற்றதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீசாந்த், "எல்லோரையும் நேசிக்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் நன்றி சொன்னால் அது போதுமான இருக்காது. உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி ஏலத்திற்கான உங்கள் பிரார்த்தனையில் என்னை வைத்துக்கொள்ளுங்கள்”ஓம் நம சிவயா என டுவீட் செய்துள்ளார்.
Related Tags :
Next Story