சென்னை அணி சிறப்பான நினைவுகளை அளித்துள்ளது; டூ பிளசிஸ் உருக்கம்


சென்னை அணி சிறப்பான நினைவுகளை அளித்துள்ளது; டூ பிளசிஸ் உருக்கம்
x
தினத்தந்தி 13 Feb 2022 9:59 AM GMT (Updated: 13 Feb 2022 9:59 AM GMT)

சென்னை அணி சிறப்பான நினைவுகளை அளித்துள்ளது என அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டூ பிளசிஸ் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.  வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.  ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஏலத்தில், சென்னை அணியின் நட்சத்திர தொடக்க வீரராக களம் இறங்கி ரசிகர்களை மனதில் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளசிஸ் அணியை பெங்களூரு அணி ரூ.7 கோடிக்கு வாங்கியுள்ளது. 

2011- ஆம் ஆண்டு முதல் சென்னை  அணிக்காக  விளையாடி வந்த டூ பிளசிஸ், வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். டு பிளசிசை சென்னை அணி ஏலத்தில் எப்படியும் வாங்கி விடும் என எதிர்பார்த்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் சென்னை அணியின் ரசிகர்கள் இது தொடர்பாக தங்களது ஏமாற்றத்தை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், டு பிளெசிஸ் சென்னை அணி குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சென்னை அணியுடன் பத்தாண்டுகள் இருந்ததற்கு ரசிகர்கள், ஊழியர்கள், நிர்வாகம் மற்றும் வீரர்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வது எனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். நான் என் நேரத்தை மிகவும் ரசித்திருக்கிறேன். அங்குள்ள அனைவரையும் மிஸ் செய்வேன்” என கூறியுள்ளார்.Next Story
  • chat