நடுவரின் நாற்காலியை தாக்கிய முன்னனி டென்னிஸ் வீரருக்கு லட்சக்கணக்கில் அபராதம்


நடுவரின் நாற்காலியை தாக்கிய முன்னனி டென்னிஸ் வீரருக்கு லட்சக்கணக்கில் அபராதம்
x
தினத்தந்தி 25 Feb 2022 10:06 PM IST (Updated: 25 Feb 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

நடுவரை கடுமையாக வசைபாடிய ஸ்வரெவ், தனது டென்னிஸ் மட்டையால் நடுவரின் நாற்காலியை ஆவேசத்துடன் தாக்கினார்.

மெக்சிகோ,

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் அண்மையில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் இணை தோல்வியை தழுவியது. இந்த போட்டி முடிந்த பின்னர் நடுவரை கடுமையாக வசைபாடிய ஸ்வரெவ், தனது டென்னிஸ் மட்டையால் நடுவரின் நாற்காலியை ஆவேசத்துடன் தாக்கினார்.

இந்த செயலுக்கு கண்டனம் வலுத்த நிலையில், மெக்சிகோ ஓபனில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சூழலில் நடுவரை வசைபாடியதற்காக 20 ஆயிரம் அமெரிக்க டாலர், போட்டியின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக 20 ஆயிரம் டாலர் என ஸ்வரெவ்விற்கு இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story