தலையை பதம்பார்த்த பவுன்சர்... உலக கோப்பை தொடரில் பங்கேற்பாரா ஸ்மிரிதி மந்தனா ?


தலையை பதம்பார்த்த பவுன்சர்... உலக கோப்பை தொடரில் பங்கேற்பாரா ஸ்மிரிதி மந்தனா ?
x
தினத்தந்தி 28 Feb 2022 10:27 AM IST (Updated: 28 Feb 2022 10:30 AM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்க வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் வீசிய பந்து மந்தனாவின் தலையை தாக்கியதில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

ரங்கியோரா,

பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்க வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் வீசிய பந்து மந்தனாவின் தலையை தாக்கியது. களத்திற்குள் உடனடியாக வந்த இந்திய அணியின் மருத்துவ குழுவினர் மந்தனாவை பரிசோதித்தனர். பின்னர் அவர் ஆட்டமிழக்காமல் ரிட்டையர்டு ஹர்ட் முறையில்  மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் மருத்துவ குழு அவரை பரிசோதித்தனர். இந்த நிலையில் அவர் போட்டிகளில் பங்கேற்க முழு உடல் தகுதியோடு இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story