மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2022: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2022: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 5 March 2022 8:53 PM GMT (Updated: 5 March 2022 8:53 PM GMT)

முதலாவது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. 

இந்த போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. 

இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story
  • chat