ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 349 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 349 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை
x
தினத்தந்தி 1 April 2022 9:58 PM GMT (Updated: 1 April 2022 9:58 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிராக 327 ரன்களை ‘சேசிங்’ செய்ததே பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

லாகூர்,

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி இமாம் உல்-ஹக் (106 ரன்), கேப்டன் பாபர் அசாம் (114 ரன்) ஆகியோரது சதத்தின் உதவியுடன் 49 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 349 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 327 ரன்களை ‘சேசிங்’ செய்ததே அந்த அணியின் சாதனையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (மாலை 3.30 மணி) நடக்கிறது.

Next Story