ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் அரைசதம்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன .
மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும் 27 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விராட் கோலி 12 ரன்களில் (ரன் அவுட் ) விக்கெட்டை பறிகொடுத்தார் .
40 ரன்களில் 3 விக்கெட் இழந்து பெங்களூரு அணி தடுமாறியது , விக்கெட்டுக்களை இழந்தாலும் மறுபுறம் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார் ,டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரி பறக்கவிட்டார் .
சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் .தொடர்ந்து விளையாடிய மேக்ஸ்வெல் ,குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்
Related Tags :
Next Story