ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு


ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 1 May 2022 7:10 PM IST (Updated: 1 May 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதுகின்றன

 மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 இன்று நடைபெறும்   46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதுகின்றன.போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி 
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். 

ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு மங்கி விடும். அதனால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னை அணிக்கு வாழ்வா-சாவா? மோதல் என்பதில் சந்தேகமில்லை.மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கும் டோனி மாற்றத்தை கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணி பேட்டிங்கை விட பந்து வீச்சில் பலம் பொருந்திய அணியாக தென்படுகிறது.

Next Story