மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் வெற்றி..!
image courtesy: Madrid open twitterநேற்று நடைபெற்ற அரைஇறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் 7-6 (7-5), 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மேலும் நேற்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story






