பந்துவீச்சின் போது நடுவர் மீது தவறுதலாக பந்தை எறிந்த பொல்லார்ட்- வைரல் வீடியோ..!!


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 10 May 2022 6:16 PM IST (Updated: 10 May 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

நடுவர் மீது தவறுதலாக பந்தை எறிந்த பொல்லார்ட்-வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற  56-வது லீக் ஆட்டத்தில்  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது 10-வது ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்ட் வீசினார்.

அந்த ஓவரின் 5-வது பந்தை வீச பொல்லார்ட் ஓடிவர, அவரது கையில் இருந்த பந்து தவறுதலாக பின்புறமாக சென்று நடுவர் மீது பட்டது. நடுவரிடம் உடனடியாக பொல்லார்ட்மன்னிப்பு கோர அதற்கு நடுவர் புன்னகைத்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 More update

Next Story