இன்றைய ராசிபலன் -18.5.2024


12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
x
தினத்தந்தி 18 May 2024 6:44 AM IST (Updated: 18 May 2024 10:48 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 5-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று முழுவதும் உத்திரம்

திதி : இன்று பிற்பகல் 12.53 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம் : மரண யோகம்

நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 9.00 - 10.30

எமகண்டம் பிற்பகல் : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

ரிஷபம்

எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும்.அனுசரிப்பது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மிதுனம்

புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். உடல் நலம் தேறும். பணப் புழக்கம் மிகும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

கடகம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

சிம்மம்

பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கன்னி

மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். சம்பள பாக்கி கைக்கு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

துலாம்

மகளுக்கு திருமணம் கூடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும் அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும்

அதிர்ஷ்டநிறம் : ஊதா

விருச்சிகம்

சில நேரங்களில் சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

தனுசு

நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது இடத்தில் வேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மகரம்

செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். பழைய பாக்கி வசூலாகும் வாய்ப்பு உள்ளது.உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கும்பம்

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவர். உத்யோகஸ்தர்கள் வெளியூருக்கு மாற்றலாவர். பயணங்களின்போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள்

மீனம்

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்க கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

அதிர்ஷ்டநிறம்: சாம்பல்

1 More update

Next Story