இன்றைய ராசிபலன்


இன்றைய ராசிபலன்
x

கடக ராசிகாரர்கள் தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 26-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.26 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

திதி: இன்று காலை 07.43 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 7.30

குளிகை காலை: 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 1.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்

ராசிபலன்

மேஷம்

புதுச் சொத்துக்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

ரிஷபம்

பணம் கையில் சரளமாக புழங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டினை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கரும்பச்சை

மிதுனம்

அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கடகம்

தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

சிம்மம்

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : கிளிப்பச்சை

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : வயலட்

துலாம்

தோல்வி பயம் நீங்கும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

விருச்சிகம்

பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

தனுசு

தங்க ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள். புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும்.

அதிர்ஷ்டநிறம் : கடல்நீலம்

மகரம்

மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கும்பம்

பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மீனம்

அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்


Next Story