தொடர் தோல்விகளால் தவிக்கும் பெங்களூரு...முதல் வெற்றியை பதிவு செய்யுமா..? - உ.பி. அணியுடன் இன்று மோதல்...!


தொடர் தோல்விகளால் தவிக்கும் பெங்களூரு...முதல் வெற்றியை பதிவு செய்யுமா..? - உ.பி. அணியுடன் இன்று மோதல்...!
x

Image Courtesy: @wplt20

பெண்கள் பிரிமீயர் லீக்கில் பெங்களூரு அணி ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியட்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. உ.பி அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 5 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி இந்த ஆட்டத்திலும் தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். அதனால் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணியின் வீராங்கனைகள் கடுமையாக முயற்சிப்பர். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.



Next Story