விக்ரம் நடிப்பாரா? வைரமுத்துவின் நாவல் சினிமா படமாகிறது

Update: 2023-04-22 05:24 GMT

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். இந்த நாவலுக்கு 2003-ல் உயரிய சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதோடு 23 மொழிகளில் மொழி பெயர்க்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவரை ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

மதுரை அருகே வைகை அணை கட்டியபோது காலி செய்யப்பட்ட 14 கிராம மக்கள் நடத்திய போராட்டமே இந்த நாவலின் கதை. மண்சார்ந்த மக்களின் வாழ்வியலாக கதை உருவாகி இருந்தது.

இந்த நிலையில் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது படமானால் ஆஸ்கார் போன்ற விருதுகள் பெறக்கூடிய சர்வதேச தரம் இந்த கதைக்கு இருப்பதாக படக்குழுவினர் கருதுகிறார்கள்.

டைரக்டர் விக்ரம் சுகுமாரன் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை படமாக எடுக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். இவர் மதயானை கூட்டம் படத்தை எடுத்து பிரபலமானவர். தற்போது சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

கள்ளிக்காட்டு இதிகாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரமை நடிக்க வைக்க பரிசீலனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்