11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்... அதிர்ச்சி சம்பவம்

சிறுமியின் உடல் மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-05-26 16:58 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் ராம்பூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு அருகே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது சிறுமி தனியாக ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதை அறிந்த சிறுவர்கள் 3 பேர், சிறுமியை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களை தேடி வருகின்றனர். 3 சிறுவர்களும் 15 வயதுடையவர்கள். சிறுவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் உடல் மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்