மே.வங்காளத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.09 சதவீத வாக்குகள் பதிவு

நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-19 04:47 GMT

கொல்கத்தா,

நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மக்கள் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.09 சதவீத வாக்குகள் பதவாகியுள்ளது. அதேபோல உத்தர பிரதேசம்- 12.66 சதவீதம், திரிபுரா- 15.21 சதவீதம், உத்தரகாண்ட் -10.54 சதவீதம், பீகார்- 9.23 சதவீதம், சத்தீஷ்கர் -12.02 சதவீதம், அசாம்-11.15 சதவீதம், மத்திய பிரதேசம் -15 சதவீதம், மணிப்பூர்-10.76 சதவீதம், ஜம்முகாஷ்மீர்- 10.43 சதவீதம், சிக்கிம்- 7.90 சதவீதம், அருணாசல பிரதேசம்- 6.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்