காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ராணுவம் -பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2017-01-16 03:05 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் தெற்கு பகுதியில் உள்ள அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள பகால்கம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ வீரர்களும், சிறப்பு அதிரடி படையினரும் நேற்று மாலை அங்கு விரைந்தனர்.

அவூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மறைந்து இருந்த இடத்தை நோக்கி இந்திய வீரர்கள் முன்னேறினர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட அதி நவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக,  பயங்கரவாதிகள் தப்பிக்க உதவும் வகையில் அப்பகுதியை சேர்ந்த பிரிவினைவாதிகள் சிலர் இந்திய ராணுவத்துக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மாநில போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச்செய்தனர்.

மேலும் செய்திகள்