ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மும்பையில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

மும்பையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் மாணவர்கள் நேற்று போராட்டம் செய்தனர். தாராவி 90 அடி சாலையில் மும்பையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் திரண்டனர்.

Update: 2017-01-18 22:38 GMT
மும்பை,

மும்பையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் மாணவர்கள் நேற்று போராட்டம் செய்தனர். தாராவி 90 அடி சாலையில் மும்பையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சாலையில் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினர்.

காலையில் தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தமிழ் பிரமுகர்கள் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை இயற்றவில்லை என்றால் தங்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என கூறினர்.

இதே போல தாராவி காமராஜர் பள்ளி முன்பும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்