ஆருஷி பெற்றோர் விடுதலை ஆவதில் தாமதம்

ஐகோர்ட்டு தீர்ப்பு நகல் ஜெயிலுக்கு வராததால் ஆருஷி பெற்றோர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.;

Update:2017-10-13 22:22 IST
காசியாபாத், 

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார், இவரது மனைவி நூபுர். இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது மகள் ஆருஷி (வயது 14), வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் (45) ஆகியோர் 2008–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சி.பி.ஐ. போலீசார் ராஜேஷ் தல்வார், நூபுர் ஆகியோரை கைது செய்தனர். காசியாபாத் சி.பி.ஐ. கோர்ட்டு 2013–ம் ஆண்டு இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

அப்போது முதல் இருவரும் காசியாபாத், தாஸ்னா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் அலகாபாத் ஐகோர்ட்டு இருவரையும் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. ஆனாலும் அவர்கள் ஜெயிலில் இருந்து விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்  வரை ஜெயில் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

நாளை 2–வது சனிக்கிழமை என்பதால் திங்கட்கிழமை தான் அவர்கள் விடுதலை ஆவார்கள் என அவர்களது வக்கீல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்