‘வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட’ கேரள பெண்ணை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு விற்க முயற்சி

வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட பெண் தன்னை ஐ.எஸ். இயக்கத்திற்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிஉள்ளார். #Thiruvananthapuram #Latesttamilnews

Update: 2018-01-11 10:01 GMT

திருவனந்தபுரம், 


 
கேரளாவில் 24 வயது இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது தொடர்பாக வடக்கு பாரவூரில் இருந்து இருவரை போலீஸ் கைது செய்து உள்ளது. அவர்கள் இளம்பெண்ணை சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பவாஸ் ஜமால் மற்றும் முகமது ஷியாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய கணவர் வடக்கு கேரளாவை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 26) என்னை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்தார் என குற்றம் சாட்டிஉள்ளார். 

வடக்கு கேரளா இந்தியாவில் அடிப்படை இஸ்லாமியத்திற்கு ஒரு மையப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இங்கிருந்து பெண்கள், குழந்தைகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து உள்ளனர் என நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் இளம்பெண்ணை பாவூரில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு அழைத்து சென்றதாகவும் அங்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளது.

நீதிமன்றத்தில் இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் கணவர் ரியாஸை கைது செய்ய கேரள போலீஸ் இன்டர்போல் மற்றும் பிற விசாரணை முகமைகளை தொடர்புக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் உள்ள தொடர்பு ஆகியவை தொடர்பாக விசாரிக்கப்படுகிறது எனவும் போலீஸ் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்