ஏழுமலையான் பற்றி அவதூறு பேச்சு: கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு

ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு தெலுங்கானா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-01-19 22:30 GMT
நகரி, 

திருப்பதி ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசியதாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கனிமொழி எம்.பி. மீது புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அந்த புகார்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி தலைவர் மகேந்திரரெட்டி என்பவர் ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி. மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஹரீம் நகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏழுமலையான் பற்றி அவதூறாக பேசிய கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஹரீம் நகர் 3-வது டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்