பிருதிவி–2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

அணு ஆயுதத்தை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிருதிவி–2 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.

Update: 2018-02-08 03:26 GMT
பாலாசூர், 

அணு ஆயுதத்தை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிருதிவி–2 ஏவுகணை சோதனையை இந்தியா நேற்று நடத்தியது. ஒடிசா மாநிலம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்தில் நகரும் ஏவுதளத்தில் இருந்து நேற்று பகல் 11.35 மணிக்கு ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தரையில் இருந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிருதிவி–2 ஏவுகணை இரு என்ஜின்களை கொண்டது. 500 முதல் 1,000 கிலோ வரையிலான அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும்.

மேலும் செய்திகள்