ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையீடு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கருத்து அதிகாரிகள் அதிருப்தி

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்ததால் அரசு அதிருப்தியடைந்துள்ளது.

Update: 2018-10-30 08:20 GMT
புதுடெல்லி

கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்தார். 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதைக் கருத்திற்கொண்டே ஆச்சார்யா பேசியதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணம் சென்றுள்ள நிலையில் ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் அரசுடனான கருத்து வேறுபாட்டை இவ்வாறு வெளிப்படையாகப் பேசியது மிகுந்த அதிருப்தி அளிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்