மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து; 11 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாலையில் சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-01-29 03:29 GMT
உஜ்ஜைன்,

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ராம்கார் கிராமம் அருகே சாலையில் சென்ற 2 கார்கள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 2 வாகனங்களில் பயணம் செய்த 11 பேர் பலியாகினர்.  2 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்