தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-04-05 12:18 GMT
முசாபர்நகர்:

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்திருந்தது. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த 493 வேட்பாளர்கள், குறித்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. 

எனவே, அவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் மட்டும் 6 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுபற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரமேஷ் சந்த் ராய் கூறுகையில், “தேர்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்யத் தவறியதால், 493 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்