ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் அடையாளம் தெரிந்தது

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் அடையாளம் தெரிய வந்து உள்ளது.

Update: 2019-10-23 06:56 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவின் புறநகரில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.   தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

மூன்று பயங்கரவாதிகளும் பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் நவீத் தக், ஹமீத் லோன் அல்லது ஹமீத் லெல்ஹாரி மற்றும் ஜுனைத் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஹமீத் லெல்ஹாரி, 2019 மே மாதம் இறந்த காஷ்மீரின் அல்கொய்தா பிரிவின் தலைவரான ஜாகிர் மூசாவின் வாரிசு ஆவார்.

ஜாகிர் மூசாவுக்குப் பிறகு அல்கொய்தாவில் இணைந்த  ஹமீத் லெல்ஹாரி, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (ஏஜிஎச்) பயங்கரவாதக் குழுவின் வாரிசு மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்