கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை

கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-22 09:27 GMT
சென்னை,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை தயார் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி, இந்தியாவில் தயாராகி வரும் கோவேக்சின் தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றிகரமானதாக ஆக்க முயற்சித்து வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுவாசம் தொடர்பான தடுப்பூசிகள் 50 சதவீதம் வெற்றி அடைந்தாலே அதற்கு உலக சுகாதார மையம், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை அனுமதி வழங்குவதாகவும், கொரோனா தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றி அடைய வைக்க முயற்சித்து வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்