தலீபான்கள் ஆட்சி அமைந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

Update: 2021-09-05 16:49 GMT
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலைகள் உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகிறது.  இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து தார்வார் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைந்து உள்ளது. இதன்காரணமாக தான் நமது நாட்டில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இதனால் இந்த விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்