ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக விரோத நடவடிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-01 11:03 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு குழு அளித்த பரிந்துரைக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட  குப்கார் கூட்டமைப்பு முடிவு செய்தது.  இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகளான பரூக் அப்துல்லா,  உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், ’போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்திய அரசியலைமைப்பு அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் தங்கள் கருத்துக்க்ளை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை வழங்கியுள்ளது” எனத்தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்