மனைவியிடம் இருந்து விவாகரத்து: உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு

உமர் அப்துல்லா, தனது மேல்முறையீட்டில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்

Update: 2023-12-12 20:47 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தனது மனைவி பாயல் அப்துல்லாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு உமர் அப்துல்லா டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனைவி பாயல் அப்துல்லாவால் தான் கொடுமைக்கு ஆளானதாக கூறி அவரிடம் இருந்து உமர் அப்துல்லா விவாகரத்து கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி கோர்ட்டு, உமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்க முடியாது எனக்கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மேல்முறையீட்டில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரும்படி கோரியிருந்தார். இந்த நிலையில் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்