5 மாத கர்ப்பிணி ஆசிரியை மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்...!

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் ஐந்து மாத கர்ப்பிணி ஆசிரியை ஒருவர் மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Update: 2022-11-30 10:00 GMT

திப்ருகார் (அசாம்)

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்தியாலய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் (PTC) கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வரலாற்று ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட மாணவரின் மோசமான கல்வித் திறனை குறித்து பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த் கூட்டத்திற்கு பிறகு ஆசிரியை குற்றஞ்சாட்டிய மாணவர் தனது நண்பர்களுடன் ஆசிரியை மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.அவர்களில் சிலர் அவரை தள்ளினர், மேலும் ஒரு மாணவர் அவரது தலைமுடியைப் பிடித்து இழுக்க முயன்றார்.

சில பெண் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் சில மாணவிகள் கும்பல் தாக்குதலில் இருந்து அவரை காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர், ஏற்கனவே 5 மாத கர்ப்பம் காரணமாக பலவீனமாக இருந்தார். அவர் உடனடியாக ஒரு பெண் உதவியாளருடன் பள்ளி காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த் தாக்குதலில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் 22 மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முயன்ற பள்ளி துணை முதல்வரையும் மாணவர்கள் மிரட்டி அவரது வீட்டை முற்றுகையிட்டு உள்ளனர்.

மைனர் மாணவர்கள் மீது முறையான புகார் இன்னும் பதிவு செய்யப்படாததால், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்