14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.7,183 கோடி - மத்திய அரசு விடுவிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Update: 2022-09-07 04:13 GMT

புதுடெல்லி,

அதிகார பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக 2022-23ம் ஆண்டில் மொத்தம் ரூ.86,201 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. இதன்படி இந்த தொகையை சமமாக 12 மாத தவணைகளில் மத்திய நிதி அமைச்சகம் விடுவித்து வருகிறது.

அந்த வகையில் 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின்படி, 6-வது தவணையாக வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.7,183 கோடியை 14 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை விடுவிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.43,100.50 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்